|
ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையின் தமிழ் மொழிபெயர்ப்பான போர்க்குற்றவாளி என்ற நூலை தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் முக்கிய தலைவர்கள் ஆகியோருக்கு மனிதம் என்ற மனித உரிமை அமைப்பு அன்பளிப்பாக வழங்கி வருகிறது.

[சி.பி.ஐ. கட்சியின் நாடாளுமன்ற, சட்ட மன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கிய தலைவர்களுக்கு "போர்க் குற்றவாளி" புத்தகங்கள் அன்பளிப்பாக மனிதம் சார்பில் சி.பி.ஐ.யின் தமிழ் மாநில செயலாளர் திரு. பண்டியனிடம் அளிக்கப்பட்டது. மனிதம் செயல் இயக்குநர் அக்னி சுப்பிரமணியம், திரு.சுரேஷ் (சென்னை மனிதம்), வழக்குரைஞர் கோபால் (சென்னை மனிதம்)]

[சி.பி.எம். கட்சியின் நாடாளுமன்ற, சட்ட மன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கிய தலைவர்களுக்கு "போர்க் குற்றவாளி" புத்தகங்கள் அன்பளிப்பாக மனிதம் சார்பில் சி.பி.எம்.யின் தமிழ் மாநில செயலாளர் திரு. ஜி.ராமகிருஷ்ணனிடம் அளிக்கப்பட்டது]
இதனடிப்படையில், முதலில் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் முக்கிய பொறுப்பாளர்களுக்கு 25 போர்க்குற்றவாளி புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன. அன்பளிப்பின் முதல் பிரதியை கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் தா.பாண்டியன் பெற்றுக் கொண்டு நன்றி தெரிவித்தார்.
"ஐ.நா.வின் அறிக்கை முதன் முதலில் தமிழில் கொண்டுவரப்பட்டு இவ்வாறு அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு அன்பளிப்பாகக் கொடுப்பதன் மூலம், மேலும் முழுதாக அறிக்கையைப் புரிந்து கொள்ள உதவும் என்றும் தேவைப்படும் காலத்தில் இதைச் செய்துள்ளதைப் பாராட்டி நன்றி தெரிவிக்கின்றேன்", என்றார் தா.பாண்டியன்.
புத்தகத்தை மனிதம் அமைப்பின் சென்னைப் பொறுப்பாளர் சுரேஷ், தா.பாண்டியனிடம் கொடுத்தார். மனிதம் சென்னையின் இளைஞர் பிரிவு பொறுப்பாளரும் சட்டத்தரணியுமான கோபால் மற்றும் மனிதம் செயல் இயக்குநர் அக்னி சுப்பிரமணியமும் உடன் இருந்தனர்.
இதேவேளை, மார்க்சிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் முக்கிய பொறுப்பாளர்களுக்கும் 30 போர்க்குற்றவாளி புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன. அன்பளிப்பின் முதல் பிரதியை மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் பெற்றுக் கொண்டார்.
"மனிதம் அமைப்பு எவ்வித பிரதிபலனும் எதிர்ப்பார்க்காமல், ஐ.நா. அறிக்கையின் தமிழ் மொழிபெயர்ப்பை தங்களது கட்சியினருக்கு கொடுத்துள்ளதை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளப் போவதாகவும், இதற்கு பாராட்டையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறார்", எனவும் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
வரும் வாரங்களில், தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சியின் நாடாளுமன்ற, சட்ட மன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் முக்கிய பொறுப்பாளர்களுக்கும் போர்க்குற்றவாளி புத்தகங்கள் கொடுக்கப்பட உள்ளன.
"Por Kutravali" - Book on Lankan war crimes hits stands
CHENNAI: With a view to giving Tamil readers an exclusive insight and a better understanding of the controversial UN Panel report on Lankan war crimes, Chennai-based Manitham Publishers has published a book titled ‘War Criminal’ (Por Kutravali), which has reproduced the whole report in Tamil.
The publisher of the 328-page book, which has already hit the stands in the city, has dedicated about 240 pages for the translated version of UN Panel report and has given extensive details of accounts to make the reader easily understand the report.
The list of prominent Tamils who wrote preface for the book includes Visuvanathan Rudrakumaran, Prime Minister of Transnational Government of Tamil Eelam (TGTE), S J Emmanuel, president of Global Tamil Forum (GTF), Regi, President of Tamils Rehabilitation Organisation (TRO) and R Durairathinam, a journalist from Switzerland.
[A Part of the book in pdf format]

[சென்னை அண்ணா சாலையில் உள்ள காந்தளகத்தில் போர்க் குற்றவாளி குறித்த விளம்பரம், அனைவரின் கவனத்தை கவருகிறது.]

[India Today - Tamil, Review Por Kutravali book]
Nimalka Fernando, president, International Movement Against All Forms of Discrimination and Racism (IMADR), Sri Lanka, Peter Schalk of Uppasala, Sweden, and Dr Brian Senewiratne from Australia have contributed to the preface of the book.
The first part of the book contains articles related to the UN Panel’s report on war crimes, like Blossom of Tamil Eelam-Sentencing of Rajapaksa team in International Criminal Court by Agni Subramaniam, Tamil Nadu, Fight between UN-Sri Lanka on Panel report by D B S Jeyaraj, Canada, Sri Lanka-Killing Fields and three other documentaries by Yamuna Rajendran, London, and We Have to Use UN Panel Report for Our People’s Liberation’ by Thangavelu Velupillai, President of Tamil Creative Writers Association, Canada.
The second part of the book consists of 444 points and images of the Tamil translation of the UN Panel’s report in about 240 pages.
|
செய்தி வெளியிட்டுள்ள ஊடகங்கள் (தமிழ்)
|
News in Media (English)
|
|
|
|
"War Criminals" (Por Kutravali - in Tamil), Tamil translation of UN Penal report will be released in coming days
UN Penal report on Srilankan War Crimes has been translated into Tamil by Chennai based Manitham Publishers and going to be released in book format. This book will be available soon for sale in Tamil Nadu and Worldwide.
This book is consisting of two parts. Following reputed personalities has given ‘Forward’ for the book.
The first part of the book contains articles relating to UN Penal report. Blossom of Tamil Eelam - Rajepakse team going to be sentenced in ICC (Agni Subramaniam, Tamil Nadu), Fight between UN-Srilanka on Penal report (D.B.S.Jeyaraj), Srilanka - Killing Fields and 3 other Documentaries (Yamuna Rajendran, London) and "We have to use UN Penal report for our peoples liberation" (Thangavelu Velupillai, President, Tamil Creative Writers Association, Canada) has given articles for Part I.
Part II consists of 444 points and images of Tamil translation of UN Penal report.
Total no. of pages is 352 and available in Paper back and in Hard Bound. In this book, 240 pages dedicated for UN Penal report.
Book sale will be through online also available in www.manitham.net
"Massacres of Tamils" (1956-2008) book organised by NESOHR was first book published by Manitham Publishers, which has been sold over this Globe. Now "War Criminals" (Por Kutravali - in Tamil), is our Second book is coming for sale very soon.
"போர்க் குற்றவாளி", ஐ.நா.நிபுணர் குழு ஆவண அறிக்கையின் தமிழாக்கம் புத்தகமாக சில தினங்களில் வெளிவர உள்ளது
">War Criminal (Por Kutravali) -Tamil Translation Book on UN Panel Report on Srilanka - Video
ஐ.நா.நிபுணர் குழு, இலங்கையின் மீது சுமர்த்தியுள்ள போர்க் குற்றச்சாட்டுக்களை உள்ளடக்கிய ஆவண அறிக்கையை மனிதம் வெளியீடு தமிழில் மொழி மாற்றம் செய்துள்ளது. இப்புத்தகம் இன்னும் சில தினங்களில் தமிழகம் மற்றும் உலக முழுக்க விற்பனைக்கு வர உள்ளது.
இரண்டு பாகங்களை கொண்டுள்ள இப்புத்தகத்திற்கு, இன்று உலக தமிழர்களை ஒன்றிணைத்து வரும் நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமர் திரு. விசுவநாதன் ருத்ரகுமாரனும், உலகத் தமிழர் பேரவையின் தலைவர் பணியாளர் திரு. எம்.ஜே. இம்மானுவேல் அவர்களும், தமிழர் புனர்வாழ்வு கழகத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு. ரெஜி அவர்களும், மற்றும் திருமிகு. நிர்மல்கா பெர்னான்டோ (தலைவர், IMADR, இலங்கை), திரு. பேரா. பீட்டர் ஷால்க் (அப்சாலா, ஸ்வீடன்), ஊடகவியலாளர் மற்றும் செய்தி ஆசிரியராக பணியாற்றியவரும் திரு. இரா.துரைரத்தினம் அவர்களும், டாக்டர் பிரயன் செனிவரத்னே (ஆஸ்திரேலியா) ஆகியோர் அணிந்துரை வழங்கி சிறப்பித்துள்ளனர்.
முதல் பாகத்தில், ஐ.நா.நிபுணர் குழு அறிக்கையை சார்ந்துள்ள பல்வேறு செய்திகளை கொண்ட நான்கு கட்டுரைகள் கொடுக்கப்பட்டுள்ளன. தமிழீழம் மலருவதற்கான வாய்ப்பு - இராசபக்சே குழு, பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தால் தண்டிக்கப்படுவர் (அக்னி சுப்ரமணியம், தமிழ் நாடு), ஐ.நா. - இலங்கை இடையிலான அறிக்கை குறித்த மோதல் (டி.பி.எஸ்.ஜெயராஜ்), இலங்கையின் கொலைக்களம் - சாட்சிகளற்ற யுத்தம் குறித்த மூன்று ஆவணப்பட சாட்சியங்கள் (யமுனா ராஜேந்திரன், லண்டன்), எமது மக்களது விடுதலையை வென்றெடுக்க அய்யன்னா வல்லுநர் குழு அறிக்கையை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்த வேண்டும்! (தங்கவேலு வேலுபிள்ளை, தலைவர், தமிழ்ப் படைப்பாளிகள் கழகம், கனடா) ஆகியோர் எழுதிய கட்டுரைகள் தொகுக்கப்பட்டிருக்கிறது.

இரண்டாம் பாகம் முழுவதும், 444 குறிப்பு எண்களைக் கொண்டுள்ள ஐ.நா.நிபுணர் குழுவின் அறிக்கை, படங்களோடு, முழுமையாக வாசிப்புத் தமிழில் தொகுக்கப்பட்டிருக்கிறது.
புத்தகம் மொத்தம் 352 பக்கங்களை கொண்டு, சாதாரண அட்டை மற்றும் கெட்டி அட்டைகளில் அச்சிடப்பட்டுள்ளது. இதில் ஐ.நா.நிபுணர் குழுவின் அறிக்கைக்கென மட்டும் 240 பக்கங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
புத்தகத்தை www.manitham.net என்ற இணைய வழியாகவும் விற்பனைக்கு வர உள்ளது.

தமிழினப் படுகொலைகள் (1956-2008) என்ற புத்தகத்தை 2009-ல் தமிழிலும், ஆங்கிலத்திலும் வெளியிட்டு உலக முழுக்க பரவ செய்துள்ள, மனிதம் வெளியீட்டாளரின் இரண்டாவது ஆவணப் புத்தகமாக, "போர்க் குற்றவாளிகள்" வெளிவருகிறது.

[சி.பி.ஐ. கட்சியின் நாடாளுமன்ற, சட்ட மன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கிய தலைவர்களுக்கு "போர்க் குற்றவாளி" புத்தகங்கள் அன்பளிப்பாக மனிதம் சார்பில் சி.பி.ஐ.யின் தமிழ் மாநில செயலாளர் திரு. பண்டியனிடம் அளிக்கப்பட்டது]
|
Comments
நன்றி
மா.பாஸ்கரன்
யேர்மனி
RSS feed for comments to this post